புதுச்சேரி : புதுச்சேரி அருகே குயிலாப்பாளையம் பகுதியில் காணும் பொங்கலையொட்டி நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில், தமிழகத்தின் பாரம்பரிய உடையில் வெளிநாட்டவர்கள் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. புதுச்சேரிக்கு அருகில் வெளிநாட்டவர் அதிகம் வாழும் ஆரோவிலை அடுத்த குயிலாப்பாளையம் மந்தவெளி திடலில், காணும் பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடந்தது. ஆரோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளை சீவி, அவற்றிற்கு அழகிய வண்ணங்கள் தீட்டி, பலூன் கட்டி மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தனர். மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் மாடுகள் சீறிப் பாய்ந்த போது, தங்களது நிலத்தில் விளைந்த மா, புளி, வாழை போன்ற விளைபொருட்களை, சூறை விட்டு மகிழ்ந்தனர். ஆரோவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள், தமிழகத்தின் பாரம்பரிய உடையான புடவை, தாவணி அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்கள், கரும்பு, பொங்கல் வழங்கி, காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். மஞ்சு விரட்டு நிகழ்ச்சியையொட்டி குயிலாப்பாளையத்தில் சந்தை நடந்தது. அதில், மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியையொட்டி டி.எஸ்.பி., உதயகுமார், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தமிழகம்
TAMIL MOVIES,NEW TAMIL MOVIES,IMAGES,PHOTOS,TAMIL ACTOR PHOTOS,politics,spots,news
Tuesday, January 18, 2011
Tuesday, December 28, 2010
சென்னை: உலக அளவில் பொருளாதாரமும், அறிவுத் திறனும் வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவை சிறு வயதில் இருந்தே புகட்டப் பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில கவுன்சில் மற்றும் வேல்ஸ் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து, 18வது தேசிய சிறார் குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சியை ஐந்து நாட்களுக்கு நடத்துகின்றன. இதன் துவக்க விழா சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில், நேற்று நடந்தது. தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில கவுன்சில் உறுப்பினர் செயலர் வின்சென்ட் வரவேற்றார். பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்து.
முதல்வர் கருணாநிதி பேசியதாவது: பத்து முதல் 17 வயதுள்ள குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வரும் வகையில், இந்த கண்காட்சி அமைந்துள்ளது. குழந்தைகள் தங்கள் படிப்பில் மட்டுமல்லாமல் சமுதாய பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதற்கு இது போன்ற கண்காட்சிகள் ஒரு வாய்ப்பாக அமையும். அறிவியல் மாநாட்டு "நில வளம் - வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாதுகாப்போம்' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. ஒரு நாட்டின் வளத்திற்கு நிலமும், நீரும் மிக முக்கியமானது. இன்றைய நிலையில் இவை இரண்டும் மிக நெருக்கடியான நிலையில் தான் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, தான் தமிழகத்தில் விவசாயத்தில் நவீன முறையை கையாண்டு உற்பத்தியை அதிகரித்துள்ளோம். ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால், நிலத்தின் பயன்பாடு அதிகம் பாதிக்கிறது. நிலத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 1.3 கோடி எக்டர் நிலப் பரப்பில், 2.8 சதவீதம் மட்டுமே விளை நிலமாக உள்ளது. சுற்றுச் சூழலையும், நிலப் பரப்பினையும் பாதுகாக்கும் வகையில், ஜப்பான் வங்கியுடன் இணைந்து தமிழகத்தில் 686 கோடி ரூபாய் மதிப்பில் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதாரமும், அறிவுத் திறனும் வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவை சிறு வயதில் இருந்தே புகட்டப் பட வேண்டும். அதற்கு இந்த கண்காட்சி ஒரு வரப் பிரசாதமாக அமையும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
மாநாட்டில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு, அன்பரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அறிவியல் இயக்க தலைவர் கிருஷ்ணசாமி, வேல்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் மற்றும், தமிழகம், அருணாசல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாநாட்டில் திரளாக கலந்து கொண்டனர்.

Monday, December 8, 2008
நகைச்சுவை (funny images)அதிர்ச்சி + சிரிப்பு...
நகைச்சுவை (funny images)அதிர்ச்சி + சிரிப்பு...
சமிபத்தில் என்னுடைய மெயிலில் வந்த படங்கள் இவை....இது ஒரு பான்டா (panda)கரடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் காட்டுவதாக இருந்தது..முதலில் அனைத்தையும் ஒரு வித ஆர்வத்தோடு கண்டு வந்த நான்,கடைசி படத்தை பார்த்ததும் சின்ன அதிர்ச்சி,பின்பு சுதாரித்து கொண்டு வெகு நேரம் சிரித்தேன் ...நீங்களும் பாருங்க சிரிங்க.....(don't miss the last one)...
warning: இது நகைச்சுவைக்காகவே ,யாருடைய மனத்தையும் புண் படுத்தும் நோக்கத்தோடு வெளியிட்டது அன்று....(நகைச்சுவை உணர்வு அற்றவர்கள் மற்றும் சிடு மூஞ்சிகள் அனைவரும் வெளியேரிடவும்)
இது பான்டா பிறந்தவுடன்....
இங்கு தான் இது பான்டா என்பதே தெரியவரும்....
ஹலோ இங்கேயே நின்னுட்டா எப்படி,இன்னும் கொஞ்சம் கீழே வாங்க....
|
|
|
|
|
|
|
|
|
இன்னும் வாங்க....
இப்பொழுது அந்த பான்டா ஒரு தமிழ் சூப்பர் அடுக்கு மொழி நடிகர்....
எனக்கு முதலில் பார்த்தவுடன் ஒன்றும் புரியவில்லை,புரிந்தவுடன் சற்று அதிர்ச்சி,பின்பு சிரிப்பு தான்....
ஆனாலும் அதிகம் மீடியாக்களில் அடிபடுபவர் நம்முடைய T .R தான்....
உங்களுடைய கருத்தை தெரிவிக்க மறக்காதிர்கள்...
நன்றி cool...கார்த்தி
Sunday, December 7, 2008
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.
பாஜக சார்பில் முதல்வர் வசுந்தரா ராஜே தான் இந்த முறையும்முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்துமுன்னாள் முதல்வர் அசோக் கெலோட் தலைமையில் தேர்தலைசந்தித்தது காங்கிரஸ்.
குஜ்ஜார் சமூக மக்களின் போராட்டத்தை கையாண்டதில்வசுந்தரா ராஜேவின் பெயர் கெட்டது.
இந் நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை பின் தள்ளிவிட்டு காங்கிரஸ்ஆட்சியைப் பிடிக்கும் நிலையை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.
மொத்தமுள்ள 200 இடங்களில் ஆட்சியைப் பிடிக்க 100 இடங்கள் வேண்டும்என்ற நிலையில் 101 இடங்களில் அந்தக் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆனால், இப்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் தொகுதிகளில் பாஜக முன்னிலையில்உள்ளதால் சில சுயேச்சைகள் ஆதரவுடன் தான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்று தெரிகிறது.
கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய இந்த மாநிலத்தில் முதல்வராக இருந்தவசுந்தரா ராஜே ரேம்ப் வாக்கில் நடப்பது, ஹெலிகாப்டரில் பறப்பதுமாக தன்னைமிகவும் ஹை டெக் முதல்வராகக் காட்டிக் கொண்டார். அதுவே அவருக்குபின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பயோ கான் நிறுவன அதிபர் கிரன் மஜூம்தாருக்கு வாயோடு வாய் முத்தம் தந்துஅதிர்ச்சியையும் ஏற்படுத்தினார் ராஜே. இதையெல்லாம் அந்த மாநில மக்கள்ரசிக்கவில்லை.
கில்லி இந்திக்குப் போகிறது
கில்லி இந்திக்குப் போகிறது. திரிஷா வேடத்தில் கலக்கவிருக்கிறார் பாலிவுட்டின் ஹாட் நாயகிகளில் ஒருவரான தீபிகா.
விஜய்யின் சூப்பர் டூப்பர் ஹிட் பட வரிசையில் முதலில் இருப்பது கில்லி. விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், தரணி ஆகியோரின் கூட்டு கலாட்டாவில் உருவான மெகா பிளாக்பஸ்டர் படம் கில்லி.
இன்று வரை விஜய் படங்களிலேயே பெரும் கலெக்ஷனைக் கொடுத்த படம் என்ற பெருமையை கில்லி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இதில் திரிஷா வேடத்திற்கு தீபிகா புக் ஆகியுள்ளார்.
கில்லி படத்தை டிவிடியில் போட்டு பலமுறை பார்த்துக் கொண்டிருக்கிறாராம் தீபிகா. திரிஷாவின் நடிப்பு பிளஸ் ஆட்டத் திறன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால், அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஹோம் ஒர்க்காம்.
'திரி'யை மிஞ்சுமா 'தீபம்'?

'அயன்' திரைப்படத்துக்காக ஆபிரிக்காவுக்கு பறந்து விட்டார் சூர்யா!
ஆபிரிக்காவில் அயன்!
|
டோணிக்கும் தனக்கும் நல்ல நட்பு உள்ளது. அது காதலா, கல்யாணத்தில் முடியுமா என்று இப்போது சொல்ல முடியாது என்றார் நடிகை லட்சுமி ராய்.
டோணிக்கும் தனக்கும் நல்ல நட்பு உள்ளது. அதுகாதலா, கல்யாணத்தில் முடியுமா என்றுஇப்போது சொல்ல முடியாது என்றார் நடிகைலட்சுமி ராய்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, நேற்று முன்தினம் இந்திய அணியின் தேர்வு குழுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னைவந்திருந்தார். தேர்வு குழு கூட்டம் முடிந்ததும்அவர் தாஜ் ஹோட்டலில் தங்கினார். இரவில் நடிகை லட்சுமிராய் டோனியைபார்க்க ஹோட்டலுக்குள் வந்தார்.
அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் டோணியிடமிருந்துஉத்தரவு வந்ததையடுத்து அவர் உள்ளே போக அனுமதிக்கப்பட்டார். பின்னர்அவரும் டோணியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஒன்றாக விருந்துசாப்பிட்டுவிட்டு 12 மணிக்கு மேல் அங்கிருந்து லட்சுமி ராய் புறப்பட்டுச்சென்றார்.
சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடந்த போதெல்லாமல் டோணியின் ஆட்டத்தைபார்க்க லட்சுமி ராய் தவறாமல் வந்துவிடுவார். ஒரு முறை அவருக்கு பிறந்தநாள் விருந்தும் கொடுத்திருக்கிறார். எனவே டோணிக்கும், அவருக்கும் காதல்இருப்பதாக கிசுகிசு பரவி உள்ளது.
இதுகுறித்து லட்சுமி ராய் கூறுகையில்,
வியாழன்கிழமை டின்னர் சாப்பிடுவதற்காக நான் தாஜ் ஹோட்டலுக்குச்சென்றேன். ஏராளமான போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதிகாரிஒருவர் என்னிடம். எங்கே போகிறீர்கள், யாரைப் பார்க்க போகிறீர்கள் என்றுகேட்டார்.
டோணியைப் பார்க்க வந்திருப்பதாகவும் அவருடன் விருந்து சாப்பிடுவதற்காகபோகிறேன் என்றும் சொன்னேன். இதற்குள் தகவல் அறிந்த டோணி, லட்சுமி ராய்எனது ஸ்னேகிதி, உள்ளே விடுங்கள் என்று கூறியதாகத் தெரிவித்தார்கள். பின்னர்தான் உள்ளே விட்டார்கள்.
அவர் என்னை 'வருங்கால மனைவி' என்று குறிப்பிட்டதாகக் கூறுகிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. இருவரும் இதுவரை நல்ல நண்பர்கள். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார்...
நல்லாருந்தா சரிதான்
Subscribe to:
Posts (Atom)