Sunday, December 7, 2008

டோணிக்கும் தனக்கும் நல்ல நட்பு உள்ளது. அது காதலா, கல்யாணத்தில் முடியுமா என்று இப்போது சொல்ல முடியாது என்றார் நடிகை லட்சுமி ராய்.


டோணிக்கும் தனக்கும் நல்ல நட்பு உள்ளது. அதுகாதலா, கல்யாணத்தில் முடியுமா என்றுஇப்போது சொல்ல முடியாது என்றார் நடிகைலட்சுமி ராய்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, நேற்று முன்தினம் இந்திய அணியின் தேர்வு குழுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னைவந்திருந்தார். தேர்வு குழு கூட்டம் முடிந்ததும்அவர் தாஜ் ஹோட்டலில் தங்கினார். இரவில் நடிகை லட்சுமிராய் டோனியைபார்க்க ஹோட்டலுக்குள் வந்தார்.

அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் டோணியிடமிருந்துஉத்தரவு வந்ததையடுத்து அவர் உள்ளே போக அனுமதிக்கப்பட்டார். பின்னர்அவரும் டோணியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஒன்றாக விருந்துசாப்பிட்டுவிட்டு 12 மணிக்கு மேல் அங்கிருந்து லட்சுமி ராய் புறப்பட்டுச்சென்றார்.

சென்னையில் .பி.எல். போட்டி நடந்த போதெல்லாமல் டோணியின் ஆட்டத்தைபார்க்க லட்சுமி ராய் தவறாமல் வந்துவிடுவார். ஒரு முறை அவருக்கு பிறந்தநாள் விருந்தும் கொடுத்திருக்கிறார். எனவே டோணிக்கும், அவருக்கும் காதல்இருப்பதாக கிசுகிசு பரவி உள்ளது.



இதுகுறித்து லட்சுமி ராய் கூறுகையில்,

வியாழன்கிழமை டின்னர் சாப்பிடுவதற்காக நான் தாஜ் ஹோட்டலுக்குச்சென்றேன். ஏராளமான போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதிகாரிஒருவர் என்னிடம். எங்கே போகிறீர்கள், யாரைப் பார்க்க போகிறீர்கள் என்றுகேட்டார்.

டோணியைப் பார்க்க வந்திருப்பதாகவும் அவருடன் விருந்து சாப்பிடுவதற்காகபோகிறேன் என்றும் சொன்னேன். இதற்குள் தகவல் அறிந்த டோணி, லட்சுமி ராய்எனது ஸ்னேகிதி, உள்ளே விடுங்கள் என்று கூறியதாகத் தெரிவித்தார்கள். பின்னர்தான் உள்ளே விட்டார்கள்.

அவர் என்னை 'வருங்கால மனைவி' என்று குறிப்பிட்டதாகக் கூறுகிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. இருவரும் இதுவரை நல்ல நண்பர்கள். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார்...

நல்லாருந்தா சரிதான்

No comments: