Sunday, December 7, 2008

கலைஞர் தொலைக்காட்சி மிக்க்குறுகிய காலத்தில் தமிழ் தொலைக்காட்சிகளுள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது


கலைஞர் தொலைக்காட்சி மேலும் இரு புதியசேனல்களை அறிமுகப்படுத்துகிறது.

நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காக சிரிப்பொலி என்றசேனலையும், சிறுவர்களுக்காக சித்திரம் எனும்புத்தம் புதிய சேனலையும் விரைவில் ஒளிபரப்பஉள்ளது.

2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட கலைஞர்தொலைக்காட்சி மிக்க்குறுகிய காலத்தில் தமிழ் தொலைக்காட்சிகளுள்இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளைப்பொறுத்தவரை 64 சதவிகித மார்க்கெட்டைப் பிடித்து முதலிடத்தில் இருப்பது சன்குழும சேனல்கள்தான்.

அதற்கடுத்து கலைஞர் தொலைக்காட்சி 14 சதவிகித மார்கெட் மதிப்பைப்பெற்றுள்ளது. விஜய், ஜெயா தொலைக்காட்சிகள் தலா 7 சதவிகிதம் மட்டுமேபெற்றுள்ளன. வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கும் மக்கள்
தொலைக்காட்சிக்கு 3 சதவிகிதம் மட்டுமே கிடைத்துள்ளது.



தற்போது கலைஞர் இசையருவி, கலைஞர் செய்திகள் எனும் இரு கூடுதல்சேனல்களுடன் இயங்கி வருகிறது. கலைஞர் செய்தி சில தினங்களுக்குமுன்புதான் துவங்கப்பட்டது. இது 24 மணி நேர செய்திச் சேனல்.

அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் திரைத்துணுக்குகளை மையமாகக் கொண்ட 24 மணிநேர நகைச்சுவை சேனலைஅறிமுகப்படுத்துகிறது கலைஞர். இந்த சேனல் முற்றிலும் இலவசமாகக்கிடைக்கும். எஸ்வி சேகர், சோ போன்ற பிரபல நாடக ஆசிரியர்களின் புகழ்பெற்றநாடகத் தொடர்களும் இதில் ஒளிபரப்பாக உள்ளது.

அதேபோல சிறுவர்களுக்காக சித்திரம் எனும் 24 மணி நேர கார்ட்டூன் மற்றும்சிறுவர் நிகழ்ச்சி சேனலும் ஆரம்பிக்கப்பட உள்ளது

1 comment:

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>