Sunday, December 7, 2008

'அயன்' திரைப்படத்துக்காக ஆபிரிக்காவுக்கு பறந்து விட்டார் சூர்யா!

ஆபிரிக்காவில் அயன்!


வாரணம் ஆயிரம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்க, அடுத்தபுரொடக்ஷன் சார்பில் தாயாராகி வரும் இப்படத்தினை இயக்குவது பிரபல ஒளிப்பதிவாளரும், சினிமோட்டகிரபரும் ஆன கே.வி.ஆனந்த்! குறைந்த பட்ஜெட்டில், மிக ரிச்சாக கனாக்கண்டேன் படம் எடுத்து தன்னையும் அடையாளப்படுத்திக்கொண்டவர் இவர்! 40 பேர் கொண்ட படப்பிடிப்புக்குழுவுடன் இது வரை தமிழ் சினிமா கண்டிராத லொக்கேஷனுக்கு எல்லாம், அலட்டிக்கொள்ளாமல் நுழைகிறார் கே.வி.ஆனந்த்! அப்படி அவர்கள் கண்டு பிடித்த இடம் தான் ஆபிரிக்காவின் நமிபியா, போஸ்ட்வானா எல்லை பகுதியில் உள்ள மணல் மலைகளும், கடற்கரை அருகே அமைந்த அரிதான இடமும்!. கௌதமை விட்டு பிரிந்தாலும், இன்னமும் சூர்யாவை விட்டு பிரியவில்லை ஹரிஷ்! வைரமுத்துவின் வைர வரிகளில் அமைந்த "நெஞ்சே நெஞ்சே" பாடலுக்கு ஹரிஷ்ஷின் இசை பிண்ணனியில் பிண்ணியெடுக்க, பகலில் கடும் வெயிலிலும், இரவில் 5 டிகிரி குளிரிலும், தினேஷ்ஷின் கொரியகிரபியில், சூர்யா, தமனா ஜோடி நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன, அங்கு! தான்ஸானியா நாட்டில் உள்ள சிறுதீவான ஜான் ஜிபாரியில் விறு விறுப்பான சண்டை காட்சிகள் சிலவும் படமாக்கப்பட்டுள்ளன! படமான 'அயன்' திரைப்படத்துக்காக ஆபிரிக்காவுக்கு பறந்து விட்டார் சூர்யா! ஏவி.எம்.


No comments: