விஜய்யின் சூப்பர் டூப்பர் ஹிட் பட வரிசையில் முதலில் இருப்பது கில்லி. விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், தரணி ஆகியோரின் கூட்டு கலாட்டாவில் உருவான மெகா பிளாக்பஸ்டர் படம் கில்லி.
இன்று வரை விஜய் படங்களிலேயே பெரும் கலெக்ஷனைக் கொடுத்த படம் என்ற பெருமையை கில்லி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இதில் திரிஷா வேடத்திற்கு தீபிகா புக் ஆகியுள்ளார்.
கில்லி படத்தை டிவிடியில் போட்டு பலமுறை பார்த்துக் கொண்டிருக்கிறாராம் தீபிகா. திரிஷாவின் நடிப்பு பிளஸ் ஆட்டத் திறன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால், அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஹோம் ஒர்க்காம்.
'திரி'யை மிஞ்சுமா 'தீபம்'?
No comments:
Post a Comment