Sunday, December 7, 2008

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.


ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.

பாஜக சார்பில் முதல்வர் வசுந்தரா ராஜே தான் இந்த முறையும்முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்துமுன்னாள் முதல்வர் அசோக் கெலோட் தலைமையில் தேர்தலைசந்தித்தது காங்கிரஸ்.

குஜ்ஜார் சமூக மக்களின் போராட்டத்தை கையாண்டதில்வசுந்தரா ராஜேவின் பெயர் கெட்டது.

இந் நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை பின் தள்ளிவிட்டு காங்கிரஸ்ஆட்சியைப் பிடிக்கும் நிலையை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.



மொத்தமுள்ள 200 இடங்களில் ஆட்சியைப் பிடிக்க 100 இடங்கள் வேண்டும்என்ற நிலையில் 101 இடங்களில் அந்தக் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆனால், இப்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் தொகுதிகளில் பாஜக முன்னிலையில்உள்ளதால் சில சுயேச்சைகள் ஆதரவுடன் தான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்று தெரிகிறது.

கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய இந்த மாநிலத்தில் முதல்வராக இருந்தவசுந்தரா ராஜே ரேம்ப் வாக்கில் நடப்பது, ஹெலிகாப்டரில் பறப்பதுமாக தன்னைமிகவும் ஹை டெக் முதல்வராகக் காட்டிக் கொண்டார். அதுவே அவருக்குபின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பயோ கான் நிறுவன அதிபர் கிரன் மஜூம்தாருக்கு வாயோடு வாய் முத்தம் தந்துஅதிர்ச்சியையும் ஏற்படுத்தினார் ராஜே. இதையெல்லாம் அந்த மாநில மக்கள்ரசிக்கவில்லை.

No comments: