Sunday, December 7, 2008

நிவாரணப் பொருட்களை சூறையாடிய ராணுவம்:


பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள தமிழர்களை சென்றடைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் இந்தப் பொருட்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

உணவு மற்றும் உடை ஆகியவை வந்துள்ள போதிலும் நேற்று அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து வந்த இந்த நிவாரணப் பொருட்களை கிளிநொச்சித் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் பெற்றுச் சென்றனர்.



நேற்றும், இன்றும் மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் பொருட்களைப் பெற அலை மோதியது.

பலர் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர். பொருட்களை வாங்க போட்டா போட்டியும் காணப்பட்டது.

தமிழக மக்களிடமிருந்து என்று நிவாரணப் பொருட்கள் அடங்கிய பையில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தில், தமிழகத்தின் உணர்வாக இருப்பதாக தெரிவித்த மக்கள், தமிழக மக்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 8,000 உணவு மூட்டைகளும், 2,000 உடை மூட்டைகளும் வந்துள்ளன.

நிவாரணப் பொருட்களை சூறையாடிய ராணுவம்:

இதற்கிடையே, தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை வழியிலேயே மறித்து அவற்றை எடுத்து சேதப்படுத்தியதாக ராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வன்னி மக்களுக்கு தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவு மூட்டைகளில் பல உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பொருட்களில் பாதியை எடுத்து விட்டு மூட்டைகளை கட்டி ராணுவத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் உண்மையிலேயே அனுப்பப்பட்ட அளவில் பொருட்கள் தங்களது பகுதிகளுக்கு வந்து சேரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர் தமிழர்கள்.

No comments: