Wednesday, October 29, 2008

AAGAN HOT NEWS


ஏகன்-

நடனப்புயலின் அண்ணன் ராஜுசுந்தரம் இயக்கியிருக்கும் படம். அப்போ பாடல் காட்சிகள் கண்டிப்பா ஹிட்! இசை யுவன் சங்கர் ராஜா. அப்போ பாடல்கள் கண்டிப்பா ஹிட்! ஹிட்!! பில்லாவுக்கு பிறகு அஜீத்-நயன்தாரா ஜோடி சேர்ந்திருக்கும் படம். அப்போ காம்பினேஷன் கண்டிப்பா ஹிட்டோ ஹிட்! தல படம் மட்டுமல்ல, இந்த தீபாவளிக்கு வந்திருக்கும் தலையாய படமும் ஏகன்தான். இவர் ஹீரோ என்பதாலோ என்னவோ, படத்தில் நடித்திருக்கும் இன்னொரு இளம் ஹீரோவான நவ்தீப்பின் பெயரே வெளியில் தெரியவில்லை. கல்லூரி மாணவராக அஜீத் நடித்திருக்கிறார் என்பதுதான் வயிற்றை கலக்குகிறது. மற்றபடி தலய்க்கு இருக்கிற ஓப்பனிங்கிற்காகவே 50 நாள் கியாரண்டி. மிச்ச ஐம்பது நாளை ராஜு சுந்தரம் பார்த்துக் கொள்வார்!

No comments: